காலை எழுந்தவுடன் சாப்பிட தவிர்க்க வேண்டிய உணவுகள்!
வெறும் வயிற்றில் சாப்பிட தவிர்க்க வேண்டிய உணவுகள் நம் உடல்நலத்திற்கு உணவு மிக முக்கியமானது. ஆனால் எந்த நேரத்தில், என்ன சாப்பிட வேண்டும் என்பது தெரிந்தால் தான் அந்த உணவு நம் உடலுக்கு நன்மை தரும். குறிப்பாக காலை எழுந்தவுடன் வயிறு காலியாக இருக்கும் போது சில உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முக்கியமான பழக்கமாகும். 1. சிட்ரஸ் பழங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை போன்ற பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல், அமிலம் அதிகரிப்பு, குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 2. காபி மற்றும் டீ பலர் நாளை ஆரம்பிப்பது காபி அல்லது டீ குடிப்பதில்தான். ஆனால் காலியான வயிற்றில் காபி குடித்தால் காஸ்ட்ரிக் சாறு அதிகரித்து பசியை அடக்கும். இதனால் வயிற்று எரிச்சல், அமிலம், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 3. குளிர்பானங்கள் Cool drinks, soda போன்றவை உடனே refresh ஆகும் போல தோன்றினாலும், வெறும் வயிற்றில் குடித்தால் குடல் சுவரை பாதித்து bloating, acidity, digestion பிரச்சினைகளை உண்டாக்கும். 4. க...